Current Affairs 2018 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2018

Published : 10 Jun 2018
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் சாம்பியன்

கோலாலம்பூரில் நடந்த மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனும், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்றது வங்கதேச அணி.

கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகாடெமி ஓவல் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக ஆசியக்கோப்பை டி20 போட்டி நடந்து வந்தது. இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். வங்கதேச வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய வீராங்கனைகள் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தனர்.

9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே இந்திய வீராங்கனைகள் சேர்த்திருந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் வேதா 11 ரன்களிலும் அடுத்து வந்த பாட்டியா(3) பாண்டே(1) கோஸாமி(10) ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய கேப்டன் கவுர் அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் ருமானா அகமது, குப்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

113 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Current Affairs 2018 Pdf in tamil

Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf
Akash IAS Academy Study Materials
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]

No comments:

Post a Comment

தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு

புதுக்கவிதைக்கு     -    பாரதியார் சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன் பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க தனித்தமிழுக்கு    ...